திருவெண்ணெய் நல்லூர் அருகே டிரைவர் மர்ம மரணத்தில் பெண் உள்பட 4 பேர் கைது

திருவெண்ணெய் நல்லூர் அருகே டிரைவர் மர்ம மரணத்தில் பெண் உள்பட  4 பேர் கைது
X

திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையம் (கோப்பு படம்).

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டிரைவர் மர்ம மரண வழக்கில் பெண்உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டிரைவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் இளம் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வன் மகன் செல்லதுரை (வயது 23). நெல் அறுவடை எந்திர டிரைவர். கடந்த 27-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர், மறுநாள் அரசூர் பாரதி நகர் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு பின்புறம் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தன் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். செல்லத்துரையின் செல்போனில் கடைசியாக பேசியது, கெடிலம் கோபாலகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் மனைவி ஷர்மிளா(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷர்மிளாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் ஷர்மிளாவுக்கும் செல்லதுரைக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று ஷர்மிளாவின் வீட்டுக்கு சென்ற செல்லதுரை அவரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, உனது தொல்லை தாங்க முடியவில்லை என கூறி ஷர்மிளா தூக்குப் போட்டு கொள்கிறேன் என்று கூறி வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். இதனால் பயந்து போன செல்லதுரை பக்கத்து அறையில் தூக்குப் போட்டுக்கொண்டார். சிறிது நேரத்துக்கு பின்னர், ஷர்மிளா அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது, செல்லதுரை இறந்து விட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், தனது ஆண் நண்பர்கள் உதவியுடன் செல்லதுரையின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று, சாலையோரம் போட்டுசென்றது தெரியவந்தது. தடயங்களை மறைக்க முயற்சித்த நிலையில், ஷர்மிளா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற செல்லதுரையை, ஷர்மிளா அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவாக கையாண்டதில் செல்லதுரை இறந்ததாகவும், பின்னர் அவர் இறந்த தகவல் மற்றும் தடயங்களை மறைக்க முயற்சி செய்தல், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காதது உள்பட 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷர்மிளாவை கைது செய்தனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான விழுப்புரம் கீழ் முத்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் பரத் (22), ராசையா மகன் ராஜ்குமார் (22), சென்னையை சேர்ந்த அண்ணாமலை மகன் ஆனந்த் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். திருமணத்தை மீறியதாக இருந்த உறவின் காரணமாக நடந்த தற்கொலை சம்பவம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது இந்த அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!