ஓராண்டில் 3 ஆயிரம் கோடி கோயில் சொத்து மீட்பு: அமைச்சர் சேகர் பாபு

ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் சேகர் பாபு.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், முன்னூர், திருவக்கரை, திண்டிவனம், சிங்கவரம், மேல்மலையனூர் ஆகிய 8 இடங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவருடன் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தானும் இணைந்து காலை முதல் மாலை வரை சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்தனர்.
முன்னதாக மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலிலை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் ரூ.80 லட்சம் செலவில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரூ.1,500 கோடி செலவில் ஆயிரம் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் ரூ.100 கோடி செலவில் 80 கோவில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. திமுக., ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சுற்றுபயண ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, இந்து சமய அறநிலை துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சிவக்குமார், வட்டாட்சியர் பழனி, பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu