விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினர் 27 பேர் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினர்  27 பேர் பணியிட மாற்றம்
X
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் 27 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் 27 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவிட்டுள்ளார்

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் வானூர் காவல் நிலையத்திற்கும், காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், வளவனூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தமிழ்ச்செல்வன் கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கும், செஞ்சி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமார் பெரும்பாக்கம் மதுவிலக்கு சோதனைச்சாவடிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இவர்கள் உள்பட மொத்தம் 27 காவல்துறையினர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு