விழுப்புரத்தில் 26 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரத்தில் 26 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்
X

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

Police Department News -விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வரும் 26 உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Police Department News -விழுப்புரம் மாவட்டத்தில் 26 உதவி ஆய்வாளர்களை அதிரடி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்ட எஸ் பி ஸ்ரீநாதா விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 26 உதவி ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி உடனடியாக அனைவரும் அவர், அவரவர்களுக்கு குறிப்பிட்டுள்ள பணியிடங்களில் சென்று பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் குறித்த விவரம் வருமாறு:

கண்டாச்சிபுரத்தில் பணிபுரிந்த மருதப்பன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், இங்கு பணி புரிந்து வந்த கோபி விக்கிரவாண்டிக்கும், காணையில் பணியாற்றிய பாஸ்கர் கண்டாச்சிபுரத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனார்.

மேலும்பெரிய தச்சூரில் பணியாற்றிய புனிதவள்ளி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கும், இங்கு பணியாற்றிய பிரகாஷ் காணைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலத்தில் பணி புரிந்த மகாலிங்கம் பெரிய தச்சூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை ரோந்து பணி-1ல் பணிபுரிந்த பாலசிங்கம் திருவெண்ணைநல்லூருக்கும், பெரியதச்சூரில் பணியாற்றிய பாரதிதாசன் ஒலக்கூருக்கும், ஓலக்கூரில் பணியாற்றிய தமிழ்மணி வெள்ளி மேடு பேட்டைக்கும், பிரம்மதேசத்தில் பணியாற்றும் ராஜேந்திரன் திண்டிவனம் ரோசனைக்கும், இங்கு பணிபுரிந்த ராஜேஷ் பிரம்மதேசத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளி மேடு பேட்டையில் பணியாற்றிய செந்தில்குமார் மைலத்திற்கும், அனந்தபுரத்தில் பணியாற்றிய தீபன் ராஜ் செஞ்சிக்கும், இங்கு பணியாற்றிய நடராஜன் அனந்தபுரத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலத்தில் பணியாற்றிய சையத் முகமது அலி அனந்தபுரத்திற்கும், செஞ்சியில் பணியாற்றிய ஆனந்தன் நல்லான் பிள்ளை பெற்றாளுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளி மேடு பேட்டையில் பணியாற்றிய ரங்கராஜ் திண்டிவனம் (தனி பிரிவு) ஒடி(OD)@விழுப்புரம் மாவட்டம் தலைமையிடத்திற்கும், பெரும்பாக்கம் சிபி (CP))சக்கரபாணி மற்றும் விழுப்புரம் டவுனில் பணியாற்றிய ராஜலஷ்மி ஆகிய இருவரும் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவிற்கும். இப்பிரிவில் பணியாற்றிய அண்ணாதுரை பெரும்பாக்கம் சிபி( CP) மாற்றப்பட்டுள்ளார் ,

கோட்டகுப்பத்தில் பணியாற்றிய சுந்தர்ராஜன் மரக்காணத்திற்கும், இங்கு பணியாற்றிய சிவகுருநாதன் கோட்டகுப்பம் மதுவிலக்கு பிரிவிற்கும், விக்கிரவாண்டில் பணியாற்றிய தேவரத்தினம் செஞ்சி மதுவிலக்கு பிரிவிற்கும், விழுப்புரம் தாலுகாவில் பணிபுரிந்த சத்யா விழுப்புரம் மதுவிலக்கு பிரிவிற்கும், திண்டிவனத்தில் பணிபுரிந்து வரும் ஞானசேகர் திண்டிவனம் மதுவிலக்கு பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் பணியிடம் மாற்றம் பெற்றவர்கள் அவரவர்களுக்கு பணியிடம் மாற்றம் அளிக்கப்பட்டுள்ள காவல் நிலையங்களில் தற்போது பொறுப்பேஏற்று வருகின்றனர், மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அதிரடியாக எடுத்த இந்த உத்தரவால் மாவட்ட காவல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என பல எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது போதை பொருட்களின் ஆதிக்கம் பெருமளவில் பெருகி உள்ளதால் காவல்துறை கடுமையான நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தி வருகிறது. மேலும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது