விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2279 பேர் வேட்புமனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பனங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கோமதி என்கிற வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6,மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஒன்றிய கவுன்சிலர், 688 ஊராட்சி மன்றத் தலைவர், 5088 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 6097 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,
அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 22 ந்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாட்களாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று 2279 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 5 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 47 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 288 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 1939 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,
கடந்த மூன்று நாட்களில் மாவட்டத்தில் 3811 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 5 பேரும்,ஒன்றிய கவுன்சிலருக்கு 51 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 615 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 3140 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர் என்பது குறிப்பி தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu