விழுப்புரம் மாவட்டத்தில் 11 மணி வரை 20.19 சதவீத வாக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 11 மணி வரை 20.19 சதவீத வாக்குப் பதிவு
X

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 20.19 சதவீத வாக்குகள் பதிவானது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது, அதில் இன்று காலை 11 மணி வரை , முகையூர் ஒன்றியத்தில் 11.55 சதவீதமும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 17.76 சதவீதமும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 23.10 சதவீதமும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 19.28 சதவீதமும்,ஒலக்கூர் ஒன்றியத்தில் 27.62 சதவீதமும், வானூர் ஒன்றியத்தில் 20.3 சதவீதமும், செஞ்சி ஒன்றியத்தில் 23.24 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக இதுவரை 20.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!