விழுப்புரம் மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 145 பேர் கைது
பைல் படம்.
Villupuram News -விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியன்று நேர கட்டுப்பாட்டு விதியை கண்டுகொள்ளாமல் தடையை மீறி பட்டாசு வெடித்த 145 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகையன்று அதிகளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாட்டை விதித்து சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும், அதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுத்து, மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து,1400 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்..
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொரோனா நோய் பரவலுக்கு பின்னர் இந்த ஆண்டு வரும் பொதுமக்கள் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடினர். சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புதுப்புது துணிமணிகளை அணிந்துகொண்டு தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
தீபாவளியை நீதிமன்றம் விதித்திருந்த தடையை மீறியும், நேரக்கட்டுப்பாட்டை தாண்டியும் ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடித்தனர். சிலர், தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து கொண்டாடினர். இதுதொடர்பாக நேர கட்டுப்பாட்டை கண்டுகொள்ளாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் படி மாவட்ட காவல்துறையினர் விழுப்புரம் மாவட்டத்திலும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 26 பேர் மீதும், தீபாவளியன்று 52 பேர் மீதும் என மொத்தம் 78 பேர் மீதும், திண்டிவனம் உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 3 பேர் மீதும், தீபாவளியன்று 23 பேர் மீதும் என மொத்தம் 26 பேர் மீதும், செஞ்சி உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 2 பேர் மீதும், தீபாவளியன்று 13 பேர் மீதும் என மொத்தம் 15 பேர் மீதும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளில் 5 பேர் மீதும், தீபாவளியன்று 21 பேர் மீதும் என மொத்தம் 26 பேர் என மாவட்டம் முழுவதும் 145 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu