விழுப்புரம் நகராட்சியில் 1.27 லட்சம் வாக்காளர்கள்

விழுப்புரம் நகராட்சியில் 1.27 லட்சம் வாக்காளர்கள்
X
விழுப்புரம் நகராட்சி மாவட்ட தலைநகரை உள்ளடக்கி உள்ளதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லுார், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லுார், வளவனுார், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் மொத்தம் 210 வார்டு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 014 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 186 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

விழுப்புரம் 42 வார்டுகளில் 61 ஆயிரத்து 764 ஆண்களும், 65 ஆயிரத்து 343 பெண்களும், மற்றவர்கள் 25 பேர் என 1 லட்சத்து 27 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்க உள்ளனர்.

53 ஆண் வாக்கு சாவடி, 53 பெண் வாக்கு சாவடி, 23 இரு பாலர் வாக்குசாவடி என 129 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது,

நகராட்சி 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 14 ஓட்டு எண்ணிக்கை மேஜைகள், ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 620 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 28 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கு 36 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!