/* */

விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள் வாக்குவாதம்
X

மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி கடைவீதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை 9 மணிக்கு மின்தடை ஏற்படுத்தி, மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இரவு 9 மணியை கடந்தும் பணி முடியாததால் மின் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பணி எப்போது முடியும், எத்தனை மணிக்கு மின் விநியோகம் செய்வீர்கள் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள், இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்று கூறினர்.

மின்வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு பணியை மேற்கொள்ளாததாலும், குறைந்த பணியாளர்களை கொண்டு பணி செய்வதாலும் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், உடனடியாக மின் விநியோகம் செய்யக்கோரியும் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மறியலிலும் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் விக்கிரவாண்டி கடைவீதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மின்வாரிய அதிகாரிகள் விரைந்து பணிகளை முடித்து மின் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இரவு 9.30 மணி வரை மின் சாரம் விநியோகிக்காததால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 March 2023 2:55 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...