விழுப்புரம் மாவட்டத்தில் 11,399 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 11,399 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 11,399 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக தடுப்பூசி போடபடுவதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 486 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது,

(1/12/2021) அன்று 1,349 பேருக்கு மாதிரி எடுத்ததில் அதில் இரண்டு பேருக்கு பாசிடிவ் உறுதியானது, அதனால் மாவட்டத்தில் பாசிடிவ் 0.44 சதவீதம் ஆகும், இன்று திங்கட்கிழமை (2/12/21) 1346 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் இந்த வார பாசிடிவ் 0.12 சதவீதமாக உள்ளது.

மாவட்டத்தில் இன்று கொரோனா வழக்கு ஏதும் பதியப்படவில்லை, அதற்கானஅபராத தொகையும் வசூலிக்க படவில்லை,

இதுவரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 88,289 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர், இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே,91 லட்சத்து74 ஆயிரத்து,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது,

மாவட்டத்தில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 995 தடுப்பூசி இருப்பு உள்ளது, இன்று 11399 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்,

இதுவரை மாவட்டத்தில் 19 லட்சத்து,16ஆயிரத்து ,028 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture