விழுப்புரம் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
X
விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 11 தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் தனி தாசில்தார் பிரபு வெங்கடேஷ்வரன் பெலாக்குப்பத்துக்கும், கண்டாச்சிபுரம் வருவாய் தாசில்தார் கார்த்திகேயன் வானூருக்கும், செஞ்சி தனி தாசில்தார் அலெக்சாண்டர் மேல்மலையனூருக்கும், கண்டாச்சிபுரம் தனி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரிமன்னன் கண்டாச்சிபுரம் வருவாய் தாசில்தாராகவும், மரக்காணம் தனி தாசில்தார் ரங்கநாதன் செஞ்சிதாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

பெலாக்குப்பம் நில எடுப்பு தனி தாசில்தார் தங்கமணி திண்டிவனம் தனிதாசில்தாராகவும், விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், திண்டிவனம் தனி தாசில்தார் கற்ப்பகம் கண்டாச்சிபுரம் தனி தாசில்தாராகவும், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடசுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், விழுப்புரம் அலுவலக மேலாளர் சுந்தரராஜன் மரக்காணம் தனி தாசில்தாராகவும், மேல்மலையனூர் வருவாய் தாசில்தார் கோவர்த்தனன் வானூர் வருவாய் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 11தாசில்தார்களின் பணியிட மாற்றம் உத்தரவினை மாவட்ட ஆட்சியர் மோகன் பிறப்பித்து உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்