பாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

பாலியல் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
X
விழுப்புரத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் விதித்து.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தை அருகே உள்ள இராசபுத்திரபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் பிரகாஷ்(35). இவா் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஒரு இளம்பெண்ணை காதலித்து, தனிமையில் இருந்தாராம். பின்னா், அவரை திருமணம் செய்துகொள்ள பிரகாஷ் மறுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரகாஷை கைது செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது,

இந்த நிலையில் வழக்கை விசாரித்த விழுப்புரம் மகளிா் சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி சாந்தி புதன்கிழமை அளித்த தீா்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!