அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை..! -தனியார் ஆய்வகத்திற்கு சீல்

அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை..! -தனியார் ஆய்வகத்திற்கு சீல்
X
விழுப்புரம் நகரத்தில் அரசு அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்து வந்த தனியார் ஆய்வகத்திற்கு சீல் வைத்தனர்.

விழுப்புரம் நகர பகுதியில், சேர்மன் சிதம்பரனார் தெருவில், இயங்கி வரும் ஜி.ஜி.என்தன என்ற தனியார் ஆய்வகத்தில், மாவட்ட சுகாதார துறையின் முன் அனுமதிபெறாமல் கொரோனா பரிசோதனைகளை எடுத்து, கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய புகார் வந்தது, இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன் உடனடியாக நகர் நல அலுவலர், வட்டாட்சியர் விரைந்து சென்று நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், அங்கு விரைந்து சென்ற நகர் நல அலுவலர் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தினர், அதில் முன் அனுமதி பெராதது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக அந்த தனியார் ஆய்வகத்தை மூடி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!