கல்வி சிறக்க வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

கல்வி சிறக்க வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
X

விழுப்புரம் வராகி அம்மன் கோவிலில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

கொரோனா வைரஸ் எல்லா விதத்திலும் பொதுமக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் கல்வியில் பின் தங்கி காணப்படுகின்றனர். எனவே பள்ளி குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மேன்மை அடைய விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ வராகி வித்யா சரஸ்வதி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடியும் மாணவ மாணவிகள் கல்வியில் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஸ்ரீ மகேஸ்வரன் மற்றும் ரவிக்குமார்,சமூக தொண்டர்கள் குமார், ரவி,செல்வம் உள்ளிட்ட கோவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india