/* */

அதிமுக கட் அவுட்டுகள்,பேனர்களை அகற்ற கோரிக்கை

அதிமுக கட் அவுட்டுகள்,பேனர்களை அகற்ற கோரிக்கை
X

விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக முக்கிய நகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அதிமுக கட் அவுட்டுகள் மற்றும் பேனர்களை அகற்ற கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாவட்ட டிஐஜி மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களை அடிக்கல் நாட்டியும் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் உள்ளார் . இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் கொடிக் கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக அறிவாலயம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் தங்களது போராட்ட நேரத்தில் இந்த கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் இடையூறாக இருக்கும் என்றும், மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி அனைத்து இடங்களிலும் கட்அவுட்டுகள் மற்றும் பேனர்கள் கொடிக்கம்பங்கள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி,விழுப்புரம் டிஐஜி அலுவலகம் மற்றும் எஸ்பி., அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்களை அகற்ற கோரி மனு அளித்தார். மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Updated On: 22 Feb 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு