அமித்ஷா வருகை- மேடை அமைப்பது குறித்து ஆய்வு

அமித்ஷா வருகை- மேடை அமைப்பது குறித்து ஆய்வு
X

விழுப்புரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மேடை அமைக்கும் இடத்தினை பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாஜக., சார்பில் வருகின்ற 28 ம் தேதி பாஜக., மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழுப்புரம் வருகை தருவதை ஒட்டி மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக பாஜக., மாநில துணைத்தலைவர் நரேந்திரன் விழுப்புரம் வருகை தந்தார்.பிறகு விழுப்புரத்தை அடுத்துள்ள ஜானகிபுரம் பகுதியில் மாநாடு அமைக்க இடத்தைத் தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாஜக. மாவட்ட அமைப்பு செயலாளர் குணா, மாவட்ட தலைவர் கலிவரதன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!