முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கும் பணி

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கும் பணி
X

விழுப்புரத்தில் வரும் 22ம் தேதி தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கான மேடை அமைக்கும் பணிக்கு சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் பந்தகால் ஊன்றினார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் குளத்துடன் கூடிய பூங்கா திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 22-ஆம் தேதி விழுப்புரம் வருகை தரவுள்ளார். இந்த நிகழ்வுக்கான மேடை அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட அமைச்சர் சிவி சண்முகம் அதற்கான மேடை அமைக்கும் பணியை பந்தகால் நட்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!