சில விவசாயிகள் மட்டுமே பயன் அடைகின்றனர்: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
விழுப்புரம் மாவட்டம் வேளாண்மை துறையின் சார்பில் தோட்டக்கலைத்துறை மூலம் கீழ் தணியாலம்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள பட்டுவரும் அரசின் 75 விழுக்காடு மானியம் பெற்று சொட்டுநீர் மூலம் கொய்யா சாகுபடி செய்துவரும் விவசாயி பிரேமா நிலத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு செயலாளர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் உடன் ஆர்.டி ராமசந்திரன் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல்ராஜன், தமிழக அரசின் பொது கணக்கு குழுவின் இது கடைசி பயணமாக இருக்கும், இன்று காலை கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறோம் ஆய்வின் முக்கிய நோக்கம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சுட்டிக்காட்டியது சிறப்பாக மீண்டும் செயல்படுத்தி உள்ளார்களா அல்லது அப்படியே உள்ளதா என்பதை திருத்தும் பணியில் ஆய்வு செய்வதுதான் எங்களுடைய பணி, அந்தவேலையைத்தான் தற்போது தொடங்கி செய்து வருகிறோம். அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சரியாக சந்தைப்படுத்தும் போது சரியான விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறதா? என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும் அரசு திட்டங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது அந்த தணிக்கை குற்றம்சாட்டிய பணிகளை சரிவர செய்துள்ளார்களா அல்லது அப்படியே உள்ளதா என்பதை கண்காணிக்க மட்டும்தான் இந்த குழுவின் வேலை, சிறப்பான திட்டங்களை கண்காணிப்பது எங்களுடைய வேலை இல்லை என்றார். அதனடிப்படையிலேயே இன்று காலை கடலூர் மாவட்டத்தில் தொடங்கி, தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வில் அரசு வேளாண் துறையில் மானியம் பெற்று சாகுபடி செய்வதில் சில விவசாயிகள் மட்டுமே மானியம் பெற்று பயன் அடைகின்றனர். இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அரசு கண்காணிக்க வேண்டும் என்று பழனிவேல்ராஜன் குற்றம் சாட்டினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu