லஞ்ச புகார்- சமூக நலத்துறை அலுவலர் கைது

லஞ்ச புகார்- சமூக நலத்துறை அலுவலர் கைது
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற புகாரில் சமூக நலத்துறை அலுவலர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, சின்னசேலத்தை அடுத்த தாகம்தீர்த்தாபுரம் பகுதியைச் சார்ந்த ராமலிங்கம் என்பவரிடம், அவரது மகள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பணம் வழங்குவதற்கு, சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ராமலிங்கத்திடமிருந்து ரூ.1500 லஞ்சம் பெற்றதாக சமூகவிரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமியை, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!