பாமக பிரமுகர் கொலை வழக்கு- உறவினர் கைது
விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை வழக்கில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் முத்தோப்பு கைலாசநாதர் வீதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் பாமக நகர துணை செயலாளராக இருந்து வந்தார். வீட்டின் அருகே நடந்து சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் ரவியின் அண்ணன் மகனான ஜெயகணேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக ரவியை கொலை செய்தது தெரிய வந்தது.இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஜெயகணேசை, விழுப்புரம் நகர போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2006ம் ஆண்டு வீட்டுமனை, கோவில் விழா பிரச்சனை தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததாகவும், அப்போது ரவி தரப்பினர் ஜெயகணேசை தாக்கியதால் வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஜெயகணேஷ், ரவியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu