விழுப்புரத்தில் குடியரசு தின விழா

விழுப்புரத்தில் குடியரசு தின விழா
X
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தேசிய கொடி ஏற்றி வைத்து விழாவில் 152 பயனாளிகளுக்கு 70 லட்சத்து 47 ஆயிரத்து 85 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வண்ண பலன்களையும், சமாதானப் புறாக்களையும் பறக்கவிட்டார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து காவல்துறையை சேர்ந்த தலைமை காவலர்கள் 67 பேருக்கு முதலமைச்சரின் குடியரசு தின பதக்கம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விழாவில் 152 பயனாளிகளுக்கு 70 லட்சத்து 47 ஆயிரத்து 85 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டிஐஜி எழிலரசன், காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங், திட்ட இயக்குனர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!