வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் கடந்த 58 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடெங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தனியார்மயமாக்கல் கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!