விழுப்புரம் சட்ட கல்லூரியில் மகளிர் தின விழா

விழுப்புரம் சட்ட கல்லூரியில் மகளிர் தின விழா
X

விழுப்புரம் சட்ட கல்லூரி கலையரங்கில் நடந்த மகளிர் தின விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் சட்ட கல்லூரி கலையரங்கில் மகளிர் தின விழா நடந்தது.

உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விழுப்புரம் அரசு சட்ட கல்லூரி மற்றும் ஸ்பார்க் அறக்கட்டளை ஆகியன இணைந்து சட்டக்கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் தின நிகழ்ச்சி நடத்தியது. கல்லூரி முதல்வர் கயல்விழி தலைமை வகித்தார். ரவிக்குமார் எம்பி, டாக்டர் லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினர். இதில் சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!