விழுப்புரம்: மீண்டும் மிதமாக பரவும் கொரானா

விழுப்புரம்: மீண்டும் மிதமாக பரவும் கொரானா
X

கோப்புப்படம் 

விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான வேகத்தில் கடந்த சில நாட்களாக கொரானா பரவி வருவது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 15,343 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 38 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு இந்திய அளவில் கொரானா பரவலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்தது. அதிலும் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பரவல் அதிக அளவு அதிகரித்து, பின்னர் கொரானா படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் கொரானா பரவல் மிதமான வேகத்தில் பரவ தொடங்கி உள்ளது, இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை உதாசீனப்படுத்தி விட்டு மாஸ்க் அணியாமல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு போல் கொரானா பரிசோதனையில் மாவட்ட நிர்வாகம் வேகம் காட்டாமல் பரிசோதனைகளை மாவட்ட சுகாதாரத்துறை மந்த கதியில் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

காரணம் தடுப்பூசி வந்து விட்டதால் பரிசோதனை மெத்தன போக்கில் உள்ளது. அதனால் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் கொரானா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி, தினந்தோறும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் தடுப்பூசியை கிராமந்தோறும் நேரடியாக கொண்டு சென்று மக்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்துடனான கோரிக்கை எழுந்து வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture