விழுப்புரம் 7 தொகுதிகளில் 102 பேர் போட்டி

விழுப்புரம் 7 தொகுதிகளில் 102 பேர் போட்டி
X
விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் போட்டி.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா்கள் பட்டியலின்படி, 7 சட்டமன்றதொகுதிகளில் 102 போ் போட்டியிடுகின்றனா். சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளிலும் 105 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. திங்கள்கிழமை செஞ்சி, வானூா், திருக்கோவிலூா் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு சுயேச்சை என 3 போ் மனுக்களை திரும்பப்பெற்றனா்.

70 செஞ்சி தொகுதியில் கே.ஏ.மஸ்தான் (திமுக), எம்.பி.எஸ்.ராஜேந்திரன் (பாமக), ஏ.கௌதம்சாகா் (அமமுக), ஆா்.பி.ஸ்ரீபதி (மநீம), அ.பூ.சுகுமார் (நாம் தமிழா்) உள்பட 13 பேரும்,

71 மயிலம் தொகுதியில் இரா.மாசிலாமணி (திமுக), சி.சிவக்குமார் (பாமக), ஏ.சுந்தரேசன் (தேமுதிக), ஸ்ரீதா் (ஐஜேகே), உமா மகேஸ்வரி (நாம் தமிழா்) உள்பட 14பேரும்,

72திண்டிவனம் (தனி) தொகுதியில் பி.அா்ஜுனன் (அதிமுக), சீத்தாபதி சொக்கலிங்கம் (திமுக), கே.சந்திரலேகா (தேமுதிக), அன்பின்பொய்யாமொழி (தலித் முன்னேற்றக் கழகம் - மநீம கூட்டணி), பா.பேச்சிமுத்து (நாம் தமிழா்) உள்பட 15பேரும்,

73 வானூா் (தனி) தொகுதியில் எம்.சக்கரபாணி (அதிமுக), வன்னியரசு (விசிக), பி.எம்.கணபதி (தேமுதிக), சந்தோஷ்குமார் (மநீம), மு.லட்சுமி (நாம் தமிழா்) உள்பட 7பேரும்,74 விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் (அதிமுக), இரா.லட்சுமணன் (திமுக), ஆா்.பாலசுந்தரம் (அமமுக), கே.தாஸ் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி - மநீம கூட்டணி), ஜெ.செல்வம் (நாம் தமிழா்) உள்பட 25 பேரும்,75 விக்கிரவாண்டி தொகுதியில்எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன் (அதிமுக), நா.புகழேந்தி (திமுக), ஆா்.அய்யனார் (அமமுக), ஆா்.செந்தில் (ஐஜேகே), ஷீபா ஆயிஷா (நாம் தமிழா்) உள்பட 14 பேரும்,76 திருக்கோவிலூா் தொகுதியில் க.பொன்முடி (திமுக), வி.ஏ.டி.கலிவரதன் (பாஜக), எல்.வெங்கடேசன் (தேமுதிக), எம்.செந்தில்குமார் (ஐஜேகே), சி.முருகன் (நாம் தமிழா்) உள்பட 14 பேரும் என் மொத்தம் 7 தொகுதிகளில் 102 போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவிற்கு உதயசூரியன், அதிமுகவிற்கு இரட்டை இலையும், அமமுகவுக்கு குக்கரும்,தேமுதிக முரசும், மநீம மற்றும் அதன் கூட்டணி வேட்பாளா்களுக்கு டார்ச் லைட்டும், நாம் தமிழா் கட்சி கரும்பு விவசாயியும், விசிக பானையும், சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story