விக்கிரவாண்டி அருகே புன்னகை பூக்கள் அறக்கட்டளை சார்பில் நல உதவிகள்

விக்கிரவாண்டி அருகே புன்னகை பூக்கள் அறக்கட்டளை சார்பில் நல உதவிகள்
X

விக்கிரவாண்டி அருகே காணையில் புன்னகை பூக்கள் அறக்கட்டளை சார்பில் நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விக்கிரவாண்டி அருகே காணையில் புன்னகை பூக்கள் அறக்கட்டளை சார்பில் நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

ஊரடங்கினால் வருவாய் இழந்த பொதுமக்களுக்கு புன்னகைப் பூக்கள் குழுவின் சார்பாக நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணையில் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, கல்பட்டு அரசு உயரநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வில் தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியாளர்கள், முதியோர்கள் உட்பட 100 நபர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறி வழங்கினர் .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!