உங்கிட்ட காசு வாங்கியதற்கு உனக்கொரு குத்து, அவரிடம் காசு வாங்கியதற்கு அவருக்கொரு குத்து

உங்கிட்ட காசு வாங்கியதற்கு உனக்கொரு குத்து, அவரிடம் காசு வாங்கியதற்கு அவருக்கொரு குத்து
X

அனைத்து சின்னத்திலும் வாக்களித்த வாக்காளர்

காணை ஊராட்சியில் யாருக்கும் குறை இல்லாமல் எல்லா சின்னத்திலும் வாக்களித்த 'வள்ளல் வாக்காளர்'

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களுக்கிடையே சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும், இடையில் ஒருசில விஷயங்கள் நம்மையறியாமல், சிரிக்க வைப்பதுண்டு.

அதேபோலத்தான் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியத்தில் காணை ஊராட்சி வாக்குகளை பிரிக்கும்போது, ஒரு வாக்கு சீட்டில், எந்த வேட்பாளர் மனமும் வருத்தப்படக்கூடாது என்ற எண்ணத்தில் யாருக்கும் குறை இல்லாமல் எல்லா சின்னத்திலும் ஒரு 'வள்ளல் வாக்காளர்' வாக்களித்துள்ளார்.

உன்னிடம் காசு வாங்கியதற்கு உனக்கொரு குத்து, அவரிடம் காசு வாங்கியதற்கு அவருக்கொரு குத்து என்ற வடிவேலு, மதுரை முத்துக்காளை நடித்த சினிமா காமெடி போல் இருந்தது, அவரது செய்கை. பாவம் எல்லார்ட்டயும் காசு வாங்கி இருப்பார்போல. அதுதான் வஞ்சகம் இல்லாம எல்லாத்துக்கும் ஒட்டு போட்டுட்டார்...!?

Tags

Next Story
ai jobs loss