வாக்குபதிவு மந்தம்: கூடுதல் வாக்குசாவடி கேட்டு வாக்காளர்கள் சாலைமறியல்

வாக்குபதிவு மந்தம்: கூடுதல் வாக்குசாவடி கேட்டு வாக்காளர்கள் சாலைமறியல்
X

தொரவி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் வாக்குபதிவில் மந்த நிலையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி தேர்தல் வாக்கு பதிவு புதன்கிழமை நடைபெற்றது, காலை 7 மணி முதல் மதியம் சுமார் 1 மணி வரை வாக்கு பதிவு சுமூகமான முறையில் நடைபெற்றுக் கொண்டு இருந்தது,

இந்நிலையில் அங்கு உள்ள சுமார் 950 வாக்காளர்கள் உள்ள 6,7 ஆகிய இரு வார்டுகளுக்கும் ஒரே பூத்தில் வாக்குபதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் அதிகளவில் வந்ததால் கூட்ட நெருக்கடியால் வாக்குபதிவு மந்தமான நிலையில் நடைபெற்றது. இதனால் வாக்காளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த வாக்காளர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் கூடுதல் பூத் உடனடியாக அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி, விழுப்புரம், வழுதாவூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர், உடனடியாக அங்கு விரைந்து வந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கூடுதல் பூத் மற்றும் வாக்குபதிவு நேரம் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து, மீண்டும் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்றது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!