விழுப்புரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் வட்ட மாநாடு நடைபெற்றது.
இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் வட்ட மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு வட்ட தலைவர் எஸ்.ராஜாராமன் தலைமை தாங்கினார், வட்ட பொருளாளர் என்.ரங்கநாதன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார், வட்ட துணைத்தலைவர் சி.சடையப்பன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி மாநாட்டை தொடங்கி வைத்து, தொடக்க உரையாற்றினார். வட்ட செயலாளர் ஏ.நாகராஜன் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன், மாவட்ட தலைவர் பி.சிவராமன், மாநில குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு சங்கம் குறித்து நிறையுரையாற்றினார்.
பின்னர் நெல்லை பாதுகாத்திட காணையில் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்திட வேண்டும், நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் விலை வழங்க வேண்டும், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடின்ற கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 60 வயது முடித்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பருவ மழை தொடங்கும் முன் ஏரி, குளங்களை தூர்வார சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம் வட்ட தலைவராக எஸ்.ராஜாராமன், வட்ட செயலாளராக ஏ.நாகராஜன், பொருளாளராக என்.ரங்கநாதன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் வட்ட துணைத்தலைவர் அண்ணாமலை அனைவருக்கும் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu