விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்கம்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்கம்
X

விழாவில் பரிசு பெற்ற மாணவர்கள்.

முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் மன்றத்தை மாணவர்கள் இணைந்து தொடங்கினர்.

முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் தமிழ்ச்சாரல் -22, மாணவர் மன்றம் தொடக்க விழா, முன்னாள் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி தேர்வரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் குந்தவிதேவி தலைமை தாங்கினார். துணை முதல்வர் சங்கீதா,மருத்துவ கண்கானிப்பாளர் செந்தில்குமார், நிலைய மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அவை ஆலோசகர் சத்தியபெருமாள் வரவேற்றார். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் உறவே, நட்பே, என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் ஜெய. ராஜாமூர்த்தி நடுவராக நடத்தினார். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பேசினார்கள். இதில் அவை ஆலோசகர்கள் பாமாலை, கவிஞர் சிங்காரம், முன்னாள் நிலைய மருத்துவர் சாந்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பாவலர், பாடலாசிரியர் அறிவுமதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இறுதியில் தமிழ் மன்ற செயலாளர்கள் தீனா,தீபிகா ஆகியோர் நன்றி கூறினர்.

Tags

Next Story
ai marketing future