விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி ஆர்.எம்.ஓ.விற்கு பணி நிறைவு விழா

விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி ஆர்.எம்.ஓ.விற்கு பணி நிறைவு விழா
X

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆர்.எம்.ஓ.விற்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழுப்புரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பணி நிறைவு பெற்ற ஆர்.எம்.ஓ.வுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர். எம். ஓ., விற்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு டீன் குந்தவி தேவி தலைமை தாங்கினார்.

மருத்துவ கண்காணிப்பாளர்,சுப்பிரமணியன், துணை முதல்வர் சங்கீதா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஏ.ஆர்.எம்.ஓ வெங்கடேசன் வரவேற்றார். பணி ஓய்வு பெறும் ஆர். எம்.ஓ., சாந்திக்கு டீன் குந்தவிதேவி பணி ஓய்வு சான்று வழங்கியும் பாராட்டி பேசினார்.

கல்லூரி துறை தலைவர்கள் ராஜேஸ்வரி, பூங்குழலி கோபிநாத், இளையராஜா, பிரபாகரன், ஏ. ஆர். எம்.ஓ., கள் நிஷாத், ஸ்ரீராம், நிர்வாக அதிகாரிகள் சிங்காரம், ஆனந்த ஜோதி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.தொடர்ந்து ஆர். எம். ஓ., சாந்தி, டாக்டர் தம்பிதுரை ஆகியோர் ஏற்புரை ஆற்றினர்.முடிவில் டாக்டர் புகழேந்தி நன்றி கூறினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!