விழுப்புரம்: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் ஆய்வு
X

 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணியாற்றுவோரின் அலுவலக அறையில் அனைத்து வசதிகளும் உள்ளதா என மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!