விக்கிரவாண்டி அருகே பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

விக்கிரவாண்டி அருகே பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
X

விக்கிராவாண்டி அருகே கிராம மக்கள் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

Protest News - விக்கிரவாண்டி அருகே பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest News -விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூரிலிருந்து விழுப்புரத்திற்கு ஒரு அரசு டவுன் பஸ் தடம் எண் 10 சென்று கொண்டிருந்தது பள்ளி நேரம் என்பதால் டவுன் பஸ்சில் பள்ளி மாணவ மாணவியர்கள், பயணிகள் சென்றனர். பேரணி கூட்ரோடு, சித்தணி, ஆகிய நிறுத்தத்தில்பஸ் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. பஸ் முழுவதும் அதிகப்படியான பயணிகள் இருந்து வந்தனர்.

இந்நிலையில் விசாலையில் பஸ் நின்றது அங்கு நின்ற பயணிகள் மாணவர்கள் பாதி அளவு மட்டுமே பஸ்சில் ஏற முடிந்தது. மீதி பேர் ஏற முடியாத நிலையில் இருந்ததால் அரசு டவுன் பஸ் டிரைவர் பின்னால் வரும் வண்டியில் ஏறி வாருங்கள் என கூறிவிட்டு பஸ்சை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் முன்பு நின்று சிறைபிடித்து முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

டிரைவர்பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்து படிக்கட்டில் தொங்கி வருகிறார்கள். ஆகவே பின்னால் வருகின்ற டவுன் பஸ்சில் ஏறி வருமாறு அறிவுறுத்தியதின் பேரில் பின்னர் அவர்களாகவே சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.அதன்பிறகு டிரைவர் பஸ்சை எடுத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil