ஆற்று குடிநீர் எப்போது கிடைக்கும்?: விக்கிரவாண்டி அருகே மக்கள் எதிர்பார்ப்பு

ஆற்று குடிநீர் எப்போது கிடைக்கும்?: விக்கிரவாண்டி அருகே மக்கள் எதிர்பார்ப்பு
X
விக்கிரவாண்டியில் உள்ள தொரவி கிராமத்தில் ஆற்றில் குடிநீருக்காக கிணறு வெட்டியும் இதுவரை கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படவில்லை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஆதிதிராவிட மக்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தற்போது வரை குடிநீர் ஏரி பகுதியில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது, சுவையற்ற இந்த குடிநீரை நீண்ட நாட்களாக அம்மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வராக நதியிலிருந்து தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை எழுப்பி வந்தனர்,

அரசு 2018-2019 எஸ்.சி, எஸ்டி சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் சுமார் 1.25 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி சிமெண்ட் சாலை, குடிநீர் கிணறு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்து கடந்த ஓராண்டாக பயன்பாட்டில் இருந்து வருகிறது, ஆனால் நல்ல குடிநீருக்காக ஆற்றில் வெட்டப்பட்ட குடிநீர் கிணறு கடந்த ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராமல் மாசு அடைந்து உள்ளது, இது குறித்து சம்பந்தப்பட்ட துறையில் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்ற எதிர்பார்ப்பில் ஆற்று நீர் குடிக்க எப்ப வரும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சினிமா பாணியில் கிணறு காணாமல் போய்விடுமோ எனவும் அப்பகுதி மக்கள் பயந்து வருகின்றனர்.

Tags

Next Story