ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த விக்கிரவாண்டி காவல்துறை

ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த விக்கிரவாண்டி காவல்துறை
X

ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த விக்கிரவாண்டி காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த ராணுவ வீரரின் தாயாருக்கு பார்சலில் வந்த மருந்தை கொண்டு சேர்த்த காவல்துறையினர்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறைக்கு டி.பார்த்திபன். இவர் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

இவர் விக்கிரவாண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள பாரதி நகரில் தனிமையில் வசித்து வரும் தனது 82 வயது தாயாருக்கு மருத்துவ பொருட்கள் கொண்ட பார்சல் கொரியரில் அனுப்பியிருந்தார். ஊரடங்கு காரணத்தினால் கடந்த மூன்று தினங்களாக விழுப்புரத்தில் பார்சல் தங்கிவிட்டது.

இதை வாங்கி வருவதற்கும் யாரும் இல்லாத காரணத்தினால், அவர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரணியிடம் உதவி கேட்டார். உடனடியாக ஒரு காவலர் ஒருவரை அனுப்பி ஒரு மணி நேரத்திற்குள் மருந்து பார்சலை பெற்று ராணுவ வீரரின் தாயிடம் நேரில் சென்று கொடுத்தனர்.

Tags

Next Story
ai marketing future