விக்கிரவாண்டி ஒன்றிய தலைவரக திமுகவின் சங்கீத அரசி தேர்வு
X
சங்கீத அரசி
By - P.Ponnusamy, Reporter |22 Oct 2021 8:00 PM IST
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி ஒன்றிய தலைவராக திமுகவின் சங்கீத அரசி தேர்வானார்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில், 293 மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில், 13 ஒன்யங்களிலும் சேர்மன் பதவிகளை, திமுக தன்வசப்படுத்தி உள்ளது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், ஒன்றிய தலைவர் தேர்வு இன்று ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விக்கிரவாண்டி ஒன்றியத் தலைவராக திமுகவை சேர்ந்த சங்கீத அரசி தேர்வு செய்யப்பட்டு, இன்று பதவியேற்றுக் கொண்டார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu