சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குழாயில் உடைப்பு

சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குழாயில் உடைப்பு
X
விழுப்புரம் மாவட்டம், கப்பியாம்புலியூரில், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் வீராணம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல மணி நேரமாக வெளியேறி வீணானது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கப்பியாம்புலியூர் பகுதியில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் வீராணம் குழாய் செல்கிறது.

இந்த நிலையில் வீராணம் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. பல மணி நேரமாக அதிகளவில் தண்ணீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் குளம் போல் நிரம்பி வழிந்தது. வீணாகும் குடிநீரை சம்மந்தப்பட்ட துறையினர் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி