பனப் பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்

பனப் பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பனப்பாக்கம் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்\

விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி ஒன்றியம், பனப்பாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை 23/10/2021. ராதாபுரம், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் விக்கிரவாண்டி வட்டார கல்வி அலுவலர் நா. தேன்மொழி. ஊராட்சி மன்ற தலைவர் பூவராகவன், ஊராட்சி மன்ற துணை தலைவர் குணச்சித்திரன், ராதாபுரம் சுகாதார ஆய்வாளர் பாபு, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட இணை கன்வீனர் தமிழழகன். மகளிர் சங்க குழு தலைவி சௌந்தரி, கிராம உதவியாளர் ஏழுமலை, அங்கன்வாடி அமைப்பாளர், சங்கீதா, கிராம ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், முத்தழகன்மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture