விழுப்புரம் அருகே மணல் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே மணல் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல்
X

பைல் படம்.

Villupuram Today News- விழுப்புரம் மாவட்டம், கானை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்திய இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Villupuram Today News- விழுப்புரம் மாவட்டம்,காணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவலர்கள் லட்சுமிபுரம் தென்பண்ணையாற்று அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காவலர்களை பார்த்ததும், அதில் வந்தவர்கள் சரக்கு வாகனத்தை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இதையடுத்து அந்த சரக்கு வாகனங்களை பார்த்தபோது, அதில் மணல் கடத்தப்பட்டு வந்தது காவலர்களுக்கு தெரிந்தது.

இதையடுத்து அந்த வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தல் தொடர்பாக வேலாயுதம், முருகதாஸ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!