வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதி தாலுகா அலுவலகத்தில் தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கை குறித்த பயிற்சி வழங்கி, நடைமுறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

இந் பயிற்சிக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தல் அலுவலர் அறிவுடை நம்பி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, கணேசன், கீதா, வேல்முருகன், மனோகரன், பாஸ்கரதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் தனி தாசில்தார் வேலு வரவேற்றார்.

இதில் மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, வருவாய் உதவியாளர் குமரன், தொகுதி ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள், மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்