விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயலை ஆய்வு செய்தார் உதவி இயக்குனர்

விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயலை ஆய்வு செய்தார் உதவி இயக்குனர்
X

விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயல் தோட்டக்கலைத்துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள எண்ணெய் வயலை தோட்டக்கலை துறை அலுவலர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து, மகசூல் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

சென்னை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது ஹக்கீம் விக்கிரவாண்டியில் முன்னோடி விவசாயியான குமாரசாமியின் எண்ணெய் பனை வயலை ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளுக்கு அரசு மான்யம், மகசூல் அதிகரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேசன், அலுவலர் அனுசுயா, உதவி அலுவலர் நீலவேணி, கோத்ரெஜ் நிறுவன மேலாளர் அசோகன், முத்துசெல்வன். முன்னோடி விவசாயிகள் குமாரசாமி, சண்முகம், ராஜரத்தினம், முத்தையன், தாமோதரன், ஜெயமூர்த்தி, கள அலுவலர் ஏழுமலை உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!