விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை செயலர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை செயலர் திடீர் ஆய்வு
X

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் த.மோகன் முன்னிலையில் இன்று (25.01.2022) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும் நோய் தொற்று சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!