விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்: லாரியுடன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

Vehicle Seized- விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

Vehicle Seized- விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் கண்ணாந்தல் கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் லாரியுடன் நின்றிருந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வேலூர் தென்னமர வீதியை சேர்ந்த மோகன் மகன் குமரேசன்(வயது 27) என்பதும், கண்ணாந்தல் கிராமத்தை சேர்ந்த சகாயம் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!