வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் நிறுத்தி வைப்பு: வேட்பாளர் சாலை மறியல்

வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் நிறுத்தி வைப்பு: வேட்பாளர் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட அதனூர் கிராம மக்கள்

காணை ஒன்றியம், அதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வெற்றி பெற்ற சான்றிதழ் அளிக்காததால் வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டார்

விழுப்புரம் மாவட்டம், கானை ஒன்றியம் அதனூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ரேவதியின் வெற்றியை அறிவிக்காமல், ஆளுங்கட்சிக்கு சாதகமாக வெற்றி சான்றிதழை அதிகாரிகள் வழங்காமல் நிறுத்தி வைத்ததாக கூறி அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்

உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். .இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதே போன்று திருப்பனூர் ஊராட்சி பொதுமக்கள் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story