கள் இறக்க அனுமதி கேட்டு பனை மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்

கள் இறக்க அனுமதி கேட்டு பனை மரத்தில் ஏறி  ஆர்ப்பாட்டம்
X
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கள் இறக்க தடையை நீக்கக்கோரி பனை மரத்தில் ஏறி நின்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லுசாமி தலைமையில் கள் இறக்கி விற்கும் உரிமை மீட்பு அறப்போராட்டம் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 50-வது நாளாக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூரி குடிசை கிராமத்தில் கள் இயக்கத்தோடு இணைந்து தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தீபன் தலைமையில் கள் இறக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பனை ஏறும் தொழிலாளர்கள் உரிய உபகரணங்களுடன் பனை மரத்தில் ஏறி நின்றும், தரையில் நின்றும் 85 ஆண்டு கால கள் இறக்க தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 க்கும் மேற்பட்ட பனை ஏறும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி