விக்கிரவாண்டியில் தரமற்ற பெட்ரோல் வழங்குவதாக பெட்ரோல் பங்க் முற்றுகை

விக்கிரவாண்டியில் தரமற்ற பெட்ரோல் வழங்குவதாக பெட்ரோல் பங்க்  முற்றுகை
X

விக்கிரவாண்டியில் தரமற்ற பெட்ரோல் வழங்குவதாக பெட்ரோல் பங்க் முற்றுகை

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் தரமற்ற பெட்ரோல் வழங்குவதாக கூறி வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நேமூரில் உள்ள எச்பி பெட்ரோல் பங்கில் தரமில்லாத பெட்ரோல் வினியோகம் செய்வதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர் அலட்சியபோக்கில் பேசுவதாக அப்பகுதி மக்களிடையே அதிக நாட்களாக சர்ச்சையில் இருந்து வந்தது. இந்நிலையில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்க வந்த வாகன ஓட்டி ஒருவர் காலி தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கியபோது, பெட்ரோலின் தரம் குறைவாக இருந்ததாகவும் பெட்ரோல் கலப்பட தன்மையில் இருப்பதைப் போன்றும் காட்சியளித்ததினால் அப்பகுதி பொதுமக்களுடன் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டார்.

இதனால் நேமூர் எச் பி பெட்ரோல் பங்கில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture