ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சரி செய்ய கோரிக்கை

ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சரி செய்ய கோரிக்கை
X

தொரவி அருகே மண் சரிந்து ஆபத்தான நிலையில் உள்ள சிறுபாலம்

தொரவி அருகே ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி, ஆவடையார்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வராக நதியின் குறுக்கே பாலம் கட்டி இரண்டு ஊராட்சிகளையும் இணைத்து போக்குவரத்து ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தது.

ஆனால் பாலத்தை இணைக்கும் சாலையில் அவசரத்தில் கட்டிய சிறு பாலங்கள் ஆங்காங்கே மண்சரிந்து, சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து உயிர் பலி ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே, விபத்துகள் ஏற்படும்முன்னர் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!