கலெக்டர் ஆபீஸ் முன்பு தரையில் உருண்டு ஆர்ப்பாட்டம்: அட, இதுக்கு தானா?

கலெக்டர் ஆபீஸ் முன்பு தரையில் உருண்டு ஆர்ப்பாட்டம்: அட, இதுக்கு தானா?
X

மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு,  தரையில் உருண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மறுவாக்குப்பதிவு கோரி, கல்யாணம்பூண்டி கிராமத்தினர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு, தரையில் உருண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சி ஒன்றியம், கல்யாணம் பூண்டி ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சக்திவேல் என்பவரின் மனைவி செல்வி, சீப்பு சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, முருகவேல் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா, கார் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

ஆனால், செல்வி தரப்பினர் இம்முடிவை ஏற்கவில்லை. அவர் தரப்பில் கூறுகையில், எங்களுக்கு 84 வாக்குகள் கிடைத்தன. ஐஸ்வர்யாவுக்கு, 58 வாக்குகள் தான் கிடைத்தது. ஆனால், செல்வியின் வெற்றியை மறைத்து, ஐஸ்வர்யா வெற்றி பெற்றதாக அறிவித்து, சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

எனவே, தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறாவது வார்டில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வேட்பாளர் செல்வி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்