55 வயதுக்கு மேல் நூறுநாள் வேலை இல்லை என்ற அரசாணையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

55 வயதுக்கு மேல் நூறுநாள் வேலை இல்லை என்ற அரசாணையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நூறுநாள் வேலை இல்லை என்ற அரசாணையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நூறுநாள் வேலை இனி இல்லை என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்து முண்டியம்பாக்கம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க விழுப்புரம் மாவட்ட குழு சார்பில் வயது முதிர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய அரசாணையை உடனடியாக அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பி.உமா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் ஆர்.அபிராமி, பொருளாளர் வி.ஆனந்த், துணைச்செயலாளர் பக்கிரி, துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!