விக்கிரவாண்டி பனையபுரத்தில் சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யபடுமா?

விக்கிரவாண்டி பனையபுரத்தில் சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யபடுமா?
X

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் என்ற இடத்தில் மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பனையபுரம் என்ற இடத்தில் மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் கூட்ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளம் உள்ளது. பள்ளத்தில் திடீர் மழைகளின் காரணமாக தேங்கும் மழைநீர், அதிக போக்குவரத்து காரணமாக சேறும் சகதியுமாக மாறி தண்ணீர், துர்நாற்றம் வீசி நோய் பரப்புவதோடு, அவ்வழியே செல்வோர் மீது சேறு சக்தியையும் வாரி தெளித்து வருகிறது.

அந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறையா, தேசிய நெடுஞ்சாலை துறையா என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் உடனடியாக அந்த பள்ளம் சரிசெய்ய படவில்லை எனில் அங்கு மிக பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் புதிய சாலை அமைக்கும்போது அமைக்கட்டும், தற்போது அந்த பள்ளத்தையாவது சரிசெய்ய கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இல்லையேல் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!